• Jan 11 2025

மாகாணசபையின் முழுமையான அதிகாரங்கள் கிடைக்குமாயின் அது ஒரு வரப்பிரசாதம் - அஷ்ரப் தாஹிர் எம்.பி. தெரிவிப்பு

Chithra / Dec 18th 2024, 3:10 pm
image

 

 

மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள்  கிடைக்குமாயின்  அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து   அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் அவரது அலுவலகத்தில்  இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த மாகாண சபை  முறைமையினால் கடந்த காலங்களில்  இரு மாகாணங்களை  தவிர ஏனைய   ஏழு மாகாணங்களை சேர்ந்த மக்கள் தான் பயனடைந்தார்கள் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

இதில் வடமாகாணம், கிழக்கு மாகாணம் என இரண்டு மாகாணங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

இங்கு உரிய  அதிகாரம் வழங்கப்படாமையினால் தான்  இம்மாகாணத்தில் எமது சமூகம் முழுமையான நன்மையை பெற்று கொள்ள முடியாது உள்ளது.

எனவேதான் இந்த மாகாண முறை என்பது  ஒழிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு தற்போது உள்ள  அரசாங்கத்தில்  உள்ளவர்கள் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.

அத்துடன்  இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் இவ்விடயம் குறித்து பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால்  வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் மக்களுக்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற, அத்துடன் அபிவிருத்தி சார் பணிகள்  மக்களுக்காக சென்றடைய வேண்டும் என்பதுடன் ,வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்வதற்காகவும்  மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் நாங்கள் பல தடைகளை சந்தித்து இருக்கின்றோம். அதில் அதிகார ரீதியாகவும்    அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது ரீதியாகவும் இங்கு  முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. 

காணி, போலீஸ் அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட  ஏனைய ஏழு மாகாணங்களிலும் காணி போலீஸ் அதிகாரங்கள்  அவர்களுடைய கைகளில் தான் இருந்தது.

இதனால் அம்மாகாண மக்கள் நன்மை அடைந்தார்கள். அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாக பயணித்து ஒரு சமூகத்திற்கு பணிகளை செய்கின்ற முறைமையை  நாங்கள் காண்கின்றோம்.

குறிப்பாக வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணிm போலீஸ் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின் கைகளுக்கு சென்றால், இரண்டையும் தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அச்சட்டங்களை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மிக நீண்ட காலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகின்றது.

எனவே மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரயோசனம் அடைவார்கள்.

அரசியல்வாதிகளும், மக்களுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள். 

எனவே தற்போது  உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய  தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள்  செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.

ஆகவே  உள்ளூராட்சி மன்ற தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில்  இருக்கின்றது.

அந்த வகையில் எதிர்கால தேர்தலின் ஊடாக   மாகாண சபையின் முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறும் ஆக இருந்தால் அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாகாணசபையின் முழுமையான அதிகாரங்கள் கிடைக்குமாயின் அது ஒரு வரப்பிரசாதம் - அஷ்ரப் தாஹிர் எம்.பி. தெரிவிப்பு   மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள்  கிடைக்குமாயின்  அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து   அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் அவரது அலுவலகத்தில்  இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவதுஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன.இந்த மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.இந்த மாகாண சபை  முறைமையினால் கடந்த காலங்களில்  இரு மாகாணங்களை  தவிர ஏனைய   ஏழு மாகாணங்களை சேர்ந்த மக்கள் தான் பயனடைந்தார்கள் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.இதில் வடமாகாணம், கிழக்கு மாகாணம் என இரண்டு மாகாணங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உரிய  அதிகாரம் வழங்கப்படாமையினால் தான்  இம்மாகாணத்தில் எமது சமூகம் முழுமையான நன்மையை பெற்று கொள்ள முடியாது உள்ளது.எனவேதான் இந்த மாகாண முறை என்பது  ஒழிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு தற்போது உள்ள  அரசாங்கத்தில்  உள்ளவர்கள் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.அத்துடன்  இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் இவ்விடயம் குறித்து பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால்  வைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால் மக்களுக்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற, அத்துடன் அபிவிருத்தி சார் பணிகள்  மக்களுக்காக சென்றடைய வேண்டும் என்பதுடன் ,வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்வதற்காகவும்  மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த காலங்களில் நாங்கள் பல தடைகளை சந்தித்து இருக்கின்றோம். அதில் அதிகார ரீதியாகவும்    அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது ரீதியாகவும் இங்கு  முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. காணி, போலீஸ் அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட  ஏனைய ஏழு மாகாணங்களிலும் காணி போலீஸ் அதிகாரங்கள்  அவர்களுடைய கைகளில் தான் இருந்தது.இதனால் அம்மாகாண மக்கள் நன்மை அடைந்தார்கள். அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாக பயணித்து ஒரு சமூகத்திற்கு பணிகளை செய்கின்ற முறைமையை  நாங்கள் காண்கின்றோம்.குறிப்பாக வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணிm போலீஸ் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின் கைகளுக்கு சென்றால், இரண்டையும் தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அச்சட்டங்களை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மிக நீண்ட காலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகின்றது.எனவே மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரயோசனம் அடைவார்கள்.அரசியல்வாதிகளும், மக்களுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள். எனவே தற்போது  உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய  தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள்  செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.ஆகவே  உள்ளூராட்சி மன்ற தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில்  இருக்கின்றது.அந்த வகையில் எதிர்கால தேர்தலின் ஊடாக   மாகாண சபையின் முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறும் ஆக இருந்தால் அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement