• Sep 21 2024

புத்தாண்டு காலத்தில் உச்சத்தை தொட்ட ஆணுறைகள்!

Sharmi / Jan 2nd 2023, 12:36 pm
image

Advertisement

2023 புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களில் ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதிகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் ஆன்லைன் உணவு நிறுவனங்களும் தீவிரமாக இயங்கின.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10.25 மணி வரையில் மட்டும் 3.50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

எந்த பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் என ஸ்விகி ட்விட்டரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 75.4 சதவிகிதம் ஐதராபாத் பிரியாணிக்கும், 14.2 சதவிகிதம் லக்னோ பிரியாணிக்கும், 10.4 சதவிகிதம் கொல்கத்தா பிரியாணிக்கும் வாக்கு அளித்திருந்தனர்.

ஐதராபாத்தின் உணவு விடுதிகளில் ஒன்றான பவர்ச்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று மட்டும் 15 டன் பிரியாணியை தயார் செய்திருந்தது. அதுபோலவே டொமினோஸ் இந்தியா நிறுவனம் நேற்று மட்டும் 61,287 பிட்சாவை டெலிவரி செய்ததாக ஸ்விகி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியா முழுமைக்கு 12,344 கிச்சடி உணவு நேற்றிரவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.மளிகை பொருட்கள் விநியோகிக்கும் ஸ்விகி இன்ஸ்மார்ட் நிறுவனம் மூலம் 2,757 டியூரெக்ஸ் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு காலத்தில் உச்சத்தை தொட்ட ஆணுறைகள் 2023 புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களில் ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதிகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் ஆன்லைன் உணவு நிறுவனங்களும் தீவிரமாக இயங்கின. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10.25 மணி வரையில் மட்டும் 3.50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.எந்த பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் என ஸ்விகி ட்விட்டரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 75.4 சதவிகிதம் ஐதராபாத் பிரியாணிக்கும், 14.2 சதவிகிதம் லக்னோ பிரியாணிக்கும், 10.4 சதவிகிதம் கொல்கத்தா பிரியாணிக்கும் வாக்கு அளித்திருந்தனர்.ஐதராபாத்தின் உணவு விடுதிகளில் ஒன்றான பவர்ச்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று மட்டும் 15 டன் பிரியாணியை தயார் செய்திருந்தது. அதுபோலவே டொமினோஸ் இந்தியா நிறுவனம் நேற்று மட்டும் 61,287 பிட்சாவை டெலிவரி செய்ததாக ஸ்விகி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.மேலும், இந்தியா முழுமைக்கு 12,344 கிச்சடி உணவு நேற்றிரவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.மளிகை பொருட்கள் விநியோகிக்கும் ஸ்விகி இன்ஸ்மார்ட் நிறுவனம் மூலம் 2,757 டியூரெக்ஸ் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement