• May 17 2025

சம்பூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பனரால் ஏற்பட்ட குழப்பம்..!

Sharmi / May 17th 2025, 5:38 pm
image

சம்பூரில் இன்றையதினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பூர்-கடற்கரைச்சேனை பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம்(17) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபமேற்றி மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாக இருந்த நேரத்தில், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பனர் பிரச்சினைக்குரியதென அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்து பனரை கழட்ட முற்பட்டபோது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களுக்கும் குறித்த பொலிஸ் அதிகாரிக்குமிடையில் சிறிய வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

அத்தோடு குறித்த பனர் பொலிஸ் உத்தியோகத்தரால் எடுத்துச் செல்லப்பட்டது.

இதன் பின்னரே சம்பூர்-கடற்கரைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சம்பூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பனரால் ஏற்பட்ட குழப்பம். சம்பூரில் இன்றையதினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சம்பூர்-கடற்கரைச்சேனை பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம்(17) மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.அத்தோடு முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீபமேற்றி மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாக இருந்த நேரத்தில், அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பனர் பிரச்சினைக்குரியதென அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்து பனரை கழட்ட முற்பட்டபோது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்களுக்கும் குறித்த பொலிஸ் அதிகாரிக்குமிடையில் சிறிய வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.அத்தோடு குறித்த பனர் பொலிஸ் உத்தியோகத்தரால் எடுத்துச் செல்லப்பட்டது.இதன் பின்னரே சம்பூர்-கடற்கரைச்சேனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement