• Nov 23 2024

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பநிலை...!samugammedia

Sharmi / Dec 28th 2023, 12:40 pm
image

யாழ் மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய ஒருங்கிணைப்பு குழுகூட்டமானது தமிழ் எம்.பிகள் , பாதுகாப்பு தரப்பினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இந்தியாவிற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று இந்திய அரசுடன் பேசி மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,

சாதாரணமாக டெங்கு விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுகின்றீர்கள் ஆனால் நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இந்திய இழுவை மடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என கடுந்தொழியில் தெரிவித்த போது குழப்பம் ஏற்பட்டு வாய்த் தர்க்ககமாக மாறியதால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பநிலை.samugammedia யாழ் மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.இன்றைய ஒருங்கிணைப்பு குழுகூட்டமானது தமிழ் எம்.பிகள் , பாதுகாப்பு தரப்பினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இந்தியாவிற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று இந்திய அரசுடன் பேசி மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனவும் தெரிவித்தார்.இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்,சாதாரணமாக டெங்கு விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுகின்றீர்கள் ஆனால் நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இந்திய இழுவை மடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என கடுந்தொழியில் தெரிவித்த போது குழப்பம் ஏற்பட்டு வாய்த் தர்க்ககமாக மாறியதால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement