தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணமாகும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.
இதனை ஜனாதிபதி நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல அமைச்சர்கள் சில பிரச்சினையான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, உருவாகும் அனைத்து அரசியல் கூட்டணிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
எனினும் பேசும்படியான புதிய அரசியல் கூட்டணிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொடர்பில் குழப்பநிலை பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சு தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணமாகும்.எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.இதனை ஜனாதிபதி நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல அமைச்சர்கள் சில பிரச்சினையான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே, உருவாகும் அனைத்து அரசியல் கூட்டணிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.எனினும் பேசும்படியான புதிய அரசியல் கூட்டணிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.