• May 17 2025

குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணம்; பயணிகளின் போக்குவரத்துக்கு மாற்று வழி குறித்து ஆராய்வு

Chithra / Jan 31st 2025, 12:02 pm
image

 கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் மீள் நிர்மாணம் தொடர்பாக சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை குறிஞ்சாகேணி ஜும்ஆ  பள்ளிவாயலில்  நடைபெற்றது.

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தப் பால நிர்மாண வேலைகள், இரண்டு வருடங்கள் நடைபெற இருப்பதனால், நாளாந்தம் பயணிக்கும்  மக்களின் நலன் கருதி, மாற்று வழி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது, அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

மாற்றுப் பாதை தொடர்பாக, உரிய கவனம் செலுத்தப்படும் எனவும், அதற்காக ஒப்பந்தக்காரர்களுடனும், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி, நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் பின்னர், பிரதி அமைச்சர், மாற்றுப் பாதை அமைப்பது சம்பந்தமாக, வீதி அவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளருடன், குறிஞ்சாகேணி ஆற்றுக்குச் சென்று கள நிலவரங்களை பார்வையிட்டார்.

 


குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணம்; பயணிகளின் போக்குவரத்துக்கு மாற்று வழி குறித்து ஆராய்வு  கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் மீள் நிர்மாணம் தொடர்பாக சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை குறிஞ்சாகேணி ஜும்ஆ  பள்ளிவாயலில்  நடைபெற்றது.வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும், கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்தப் பால நிர்மாண வேலைகள், இரண்டு வருடங்கள் நடைபெற இருப்பதனால், நாளாந்தம் பயணிக்கும்  மக்களின் நலன் கருதி, மாற்று வழி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது, அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.மாற்றுப் பாதை தொடர்பாக, உரிய கவனம் செலுத்தப்படும் எனவும், அதற்காக ஒப்பந்தக்காரர்களுடனும், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி, நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் பின்னர், பிரதி அமைச்சர், மாற்றுப் பாதை அமைப்பது சம்பந்தமாக, வீதி அவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளருடன், குறிஞ்சாகேணி ஆற்றுக்குச் சென்று கள நிலவரங்களை பார்வையிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now