லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.
இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1900 பாஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு 128 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில்! லோஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் T20 வடிவத்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்-2028இல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 20,
ஆண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 29.
இந்த வரலாற்றுச் சம்பவம், உலகளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு புதிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
.ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி முறையே இரவு 9.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் நடைபெறும். ஐசிசி T20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும்.
அனைத்துப் போட்டிகளும் லோஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2028 லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்ப்பு – முக்கிய தகவல்கள் வெளியீடு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1900 பாஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு 128 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் லோஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் T20 வடிவத்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில், லோஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்-2028இல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 20, ஆண்கள் பதக்கப் போட்டி – ஜூலை 29.இந்த வரலாற்றுச் சம்பவம், உலகளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு புதிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி முறையே இரவு 9.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் நடைபெறும். ஐசிசி T20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும். அனைத்துப் போட்டிகளும் லோஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.