• Nov 25 2024

ஐந்து மடங்கு ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுவர்கள்..! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 7th 2023, 9:05 am
image


பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்களுக்கான நுகர்வு அதிகரிப்பு..!

இலங்கையில் பாலர் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவை விட ஐந்து மடங்கு சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. 

சிறுவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவர் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா விக்கிரமசிங்க, 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் மாத்திரம் 813 சிறுவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்து மடங்கு ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கைச் சிறுவர்கள். ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்களுக்கான நுகர்வு அதிகரிப்பு.இலங்கையில் பாலர் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவை விட ஐந்து மடங்கு சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவர் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா விக்கிரமசிங்க, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேல்மாகாணத்தில் மாத்திரம் 813 சிறுவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement