• Sep 08 2024

தொடரும் கனமழை...! மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்வு...! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sharmi / Jul 15th 2024, 11:26 am
image

Advertisement

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் நீர் தேக்கங்களின்  நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் மூன்று அடி மட்டுமே உள்ளது.

அதேவேளை, கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.

விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது. லக்சபான நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இன்னும் நான்கு அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது. மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட 6 அங்குலமே நிரம்ப உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், அருவிகள் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து எந்த நேரத்திலும் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படலாம்.

ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்டசெயலாளர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனமழை காரணமாக பெரும் தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையும் பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில்  மாணவர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




தொடரும் கனமழை. மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்வு. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் நீர் தேக்கங்களின்  நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் மூன்று அடி மட்டுமே உள்ளது.அதேவேளை, கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது. லக்சபான நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இன்னும் நான்கு அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது. மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட 6 அங்குலமே நிரம்ப உள்ளது.தற்போது பெய்து வரும் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், அருவிகள் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து எந்த நேரத்திலும் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படலாம். ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்டசெயலாளர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.கனமழை காரணமாக பெரும் தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையும் பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில்  மாணவர்கள் வருகை மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement