உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும்,
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும்,
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் - நட்டஈடு வழங்க 06 வருட கால அவகாசம் கோரும் மைத்திரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.