திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பேராறு பகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை,
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால், இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலையில் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவ கூடும் என எதிர்பார்க்கின்ற ,
12 பொது சுகாதார பிரிவுகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரி சதுர கொத்தேதென்ன தெரிவித்தார்.
இதன் ஆரம்ப கட்டமாக இன்று கந்தளாய் பேராறு பகுதியில் முப்பது வீடுகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக சுகாதார அதிகாரி மேலும் கூறுகையில்,
"நுளம்புகள் பெருகு வதற்கு ஏதுவான சூழல் இருப்பதே டெங்கு மற்றும் மலேரியா நோயின் ஆபத்துக்கு முக்கிய காரணமாகும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இந்த நோயின் ஆபத்துகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும்,
டெங்கு மற்றும் மலேரியா நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலையில் டெங்கு மற்றும் மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பேராறு பகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால், இன்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.திருகோணமலையில் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவ கூடும் என எதிர்பார்க்கின்ற , 12 பொது சுகாதார பிரிவுகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரி சதுர கொத்தேதென்ன தெரிவித்தார்.இதன் ஆரம்ப கட்டமாக இன்று கந்தளாய் பேராறு பகுதியில் முப்பது வீடுகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக சுகாதார அதிகாரி மேலும் கூறுகையில், "நுளம்புகள் பெருகு வதற்கு ஏதுவான சூழல் இருப்பதே டெங்கு மற்றும் மலேரியா நோயின் ஆபத்துக்கு முக்கிய காரணமாகும். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நோயின் ஆபத்துகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும்,டெங்கு மற்றும் மலேரியா நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.