• Nov 17 2024

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி - அழகுசாதனப் பொருட்களில் ஆபத்து!

Chithra / Jun 11th 2024, 7:13 am
image

  

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், 

அதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.


வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால், சுகாதார சிக்கல்கள் பதிவாகும் அபாயமும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்கள் அதிக செறிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி - அழகுசாதனப் பொருட்களில் ஆபத்து   உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.வயது, பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல், சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால், சுகாதார சிக்கல்கள் பதிவாகும் அபாயமும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.அழகிற்காக பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்கள் அதிக செறிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement