• Nov 24 2024

அலி சப்ரி எம்.பி.யை கைது செய்ய நீதிமன்றம் பகிரங்க பிடியாணை

Chithra / Jul 9th 2024, 12:07 pm
image


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டியை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பொறுப்புக்கூறும் வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இதற்கு முன்னரும்,  பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டு தொடர்பில்,

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்க்கு  எதிராக கற்பிட்டி பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அலி சப்ரி எம்.பி.யை கைது செய்ய நீதிமன்றம் பகிரங்க பிடியாணை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டியை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பொறுப்புக்கூறும் வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.இதற்கு முன்னரும்,  பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டு தொடர்பில்,பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்க்கு  எதிராக கற்பிட்டி பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement