• Jan 22 2025

அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Chithra / Jan 21st 2025, 4:53 pm
image

 

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக, யாழ். மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு  போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக, யாழ். மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement