மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள், ஜெனரேற்றர், ஒலி பெருக்கி என்பவற்றை வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பியவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளர், ஒலிபெருக்கி உரிமையாளர் மற்றும் அவரது 19 வயது மகன் மற்றும் வாகனசாரதி ஆகியோரை வாழைச்சேனை பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நேற்றோடு இரண்டாவது தடவையாகவும் நீடித்து வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தலில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 4 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள், ஜெனரேற்றர், ஒலி பெருக்கி என்பவற்றை வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பியவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளர், ஒலிபெருக்கி உரிமையாளர் மற்றும் அவரது 19 வயது மகன் மற்றும் வாகனசாரதி ஆகியோரை வாழைச்சேனை பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நேற்றோடு இரண்டாவது தடவையாகவும் நீடித்து வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.