• Nov 22 2024

உரிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிய முல்லைத்தீவு எல்லைக் கிராம பாடசாலையில் 100 வீத சித்தி பெற்று சாதனை...!samugammedia

Sharmi / Dec 5th 2023, 11:05 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான கொக்கிளாய் கிராமத்தில் இயங்கிவரும் கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 100 வீத சித்தியடைந்து சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக காணப்படும் கொக்கிளாய் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் பாடசாலையே கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. 

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட குறித்த பாடசாலையில் இருந்த 2022(2023) ம் ஆண்டுகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நான்கு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்

இவர்கள் நால்வரும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதோடு நூறு வீத சித்தியையும் பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைவாக பரீட்சையில் தோன்றிய சிறி ஆனந்தராசா அபின்சன் 3A 3B 3C லூக்காஸ் அனுப்பிரியா A B 4C S

நாகராசா புவர்னா A 4B 3C S அருளானந்தம் கார்த்திகா 3A 5B C ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மாணவர்கள்,

உரிய அடிப்படை வசதிகள் இல்லாத போதும் விசேடமாக கல்வி நிலைய வசதிகள் ஏதும் இன்றியும் பாடசாலை கல்வியை மாத்திரம் கற்று ஆசிரியர்களின் அயராத முயற்ச்சியின் பயனாக தாம் இந்த சித்தியை பெற்றதாகவும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை நில ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியிலும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் உள்ள எமது இந்த எல்லைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் பிள்ளைகள் சாதித்து வருகின்றனர்.

குறிப்பாக ஆசிரியர் அனைவரும் வெளி இடங்களை சேர்ந்தவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் எமது பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர்

இவ்வாறான நிலையில் ஏனைய இடங்களில் இடம்பெறுவது போன்று இவர்களுக்கான விசேட மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கும் பாடசாலை வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்தவர்களேனும் ஏற்பாடு செய்து தருமாறு பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உரிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிய முல்லைத்தீவு எல்லைக் கிராம பாடசாலையில் 100 வீத சித்தி பெற்று சாதனை.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான கொக்கிளாய் கிராமத்தில் இயங்கிவரும் கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 100 வீத சித்தியடைந்து சாதனை படைத்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக காணப்படும் கொக்கிளாய் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் பாடசாலையே கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட குறித்த பாடசாலையில் இருந்த 2022(2023) ம் ஆண்டுகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நான்கு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்இவர்கள் நால்வரும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதோடு நூறு வீத சித்தியையும் பதிவு செய்துள்ளனர்.இதற்கமைவாக பரீட்சையில் தோன்றிய சிறி ஆனந்தராசா அபின்சன் 3A 3B 3C லூக்காஸ் அனுப்பிரியா A B 4C Sநாகராசா புவர்னா A 4B 3C S அருளானந்தம் கார்த்திகா 3A 5B C ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.இதன் போது கருத்து தெரிவித்த மாணவர்கள், உரிய அடிப்படை வசதிகள் இல்லாத போதும் விசேடமாக கல்வி நிலைய வசதிகள் ஏதும் இன்றியும் பாடசாலை கல்வியை மாத்திரம் கற்று ஆசிரியர்களின் அயராத முயற்ச்சியின் பயனாக தாம் இந்த சித்தியை பெற்றதாகவும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் எனவும் தெரிவித்தனர்.இதேவேளை நில ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியிலும் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் உள்ள எமது இந்த எல்லைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் பிள்ளைகள் சாதித்து வருகின்றனர்.குறிப்பாக ஆசிரியர் அனைவரும் வெளி இடங்களை சேர்ந்தவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் எமது பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர்இவ்வாறான நிலையில் ஏனைய இடங்களில் இடம்பெறுவது போன்று இவர்களுக்கான விசேட மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கும் பாடசாலை வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்தவர்களேனும் ஏற்பாடு செய்து தருமாறு பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement