• Oct 01 2024

யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Dec 27th 2023, 2:11 pm
image

Advertisement


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது படம் மற்றும் சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இளைஞர் இன்றைய தினம் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் தலைவரது புகைப்படம் தாங்கிய டீ சட்டை  அணிந்து கொண்டு மாவீரர் தினத்தில் பங்கு பற்றிய நிலையில் அன்றைய தினமே இராணுவத்தினரால் குறித்து இளைஞர் கைது செய்யப்பட்டு கொடிகாமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை வளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் இளைஞரை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியை பெறுவதற்கான விண்ணப்பத்தை மன்றில் செய்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இனைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து  இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது படம் மற்றும் சின்னம் பொறித்த டீசர்ட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இளைஞர் இன்றைய தினம் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தினால் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் தலைவரது புகைப்படம் தாங்கிய டீ சட்டை  அணிந்து கொண்டு மாவீரர் தினத்தில் பங்கு பற்றிய நிலையில் அன்றைய தினமே இராணுவத்தினரால் குறித்து இளைஞர் கைது செய்யப்பட்டு கொடிகாமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை வளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் குறித்த இளைஞர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி தர்மகுலசிங்கம் அஞ்சனன் இளைஞரை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியை பெறுவதற்கான விண்ணப்பத்தை மன்றில் செய்திருந்தார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இனைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து  இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Advertisement

Advertisement

Advertisement