அமைச்சர் விஜேபாலவின் பதவி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவு மே 5 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு இன்று (18) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்க நீதஜயரசர்கள் குழு அனைத்து தரப்பினருக்கும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியிருந்தது.
இதையடுத்து, மனுவைத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவை மே 5 ஆம் திகதி அறிவிக்க அமர்வு முடிவுசெய்துள்ளது.
இந்த மனுவை மொட்டுத்தரப்பின் முக்கியஸ்தரான ரேணுகா பெரேரா சமர்ப்பித்திருந்தார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் அதே வேளையில், ஜனாதிபதியின் தலைமைப் பணியாளராகவும் பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் பதவி என்பது ஒரு அரச பதவி என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக்கொண்டே அத்தகைய பதவியை வகிப்பது அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றதாகும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்படி, ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்ற நபராக அறிவித்து, அவரது பதவி செல்லாதது என அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளார்.
அமைச்சர் விஜேபாலவின் பதவி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அமைச்சர் விஜேபாலவின் பதவி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவு மே 5 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த உத்தரவு இன்று (18) பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்க நீதஜயரசர்கள் குழு அனைத்து தரப்பினருக்கும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியிருந்தது.இதையடுத்து, மனுவைத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவை மே 5 ஆம் திகதி அறிவிக்க அமர்வு முடிவுசெய்துள்ளது.இந்த மனுவை மொட்டுத்தரப்பின் முக்கியஸ்தரான ரேணுகா பெரேரா சமர்ப்பித்திருந்தார்.பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும் அதே வேளையில், ஜனாதிபதியின் தலைமைப் பணியாளராகவும் பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் தலைமைப் பணியாளர் பதவி என்பது ஒரு அரச பதவி என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக்கொண்டே அத்தகைய பதவியை வகிப்பது அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றதாகும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.அதன்படி, ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்ற நபராக அறிவித்து, அவரது பதவி செல்லாதது என அறிவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளார்.