• Jan 21 2025

மாணவனை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Jan 20th 2025, 12:57 pm
image

 

முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கு 18,520 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்ற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அறிவிப்பை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

சந்தேக நபரான அதிபர், குறித்த பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்துத் தொகுதிக்கான தொகையை, பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரியிடம் செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், பணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இவரைக் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாணவனை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கு 18,520 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்ற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அறிவிப்பை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேக நபரான அதிபர், குறித்த பாடசாலையில் பிள்ளையொன்றைச் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்துத் தொகுதிக்கான தொகையை, பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரியிடம் செலுத்துமாறு முறைப்பாட்டாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.பின்னர், பணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இவரைக் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement