இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை என்பன இணைந்து இன்று நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சின் சுற்றுவட்டார வீதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மாளிகாகந்த நீதிமன்றில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
இதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஒன்று கூடி அதனைச் சூழவுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை பாவனைக்கு பயன்படுத்த முடியாதவாறு மறித்து போராட்டம் நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுகாதார பட்டதாரிகளின் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை என்பன இணைந்து இன்று நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மருதானை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுகாதார அமைச்சின் சுற்றுவட்டார வீதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மாளிகாகந்த நீதிமன்றில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .இதன்படி, இன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஒன்று கூடி அதனைச் சூழவுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் நடைபாதைகளை பாவனைக்கு பயன்படுத்த முடியாதவாறு மறித்து போராட்டம் நடத்துவதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.