முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலை இழிவுபடுத்தும் வகையில் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தமக்கு முன்பிணை வழங்குமாறு ஶ்ரீரங்கா நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்நிலையில், கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த விளக்கத்தை கருத்திற்கொண்டு ஶ்ரீரங்காவின் முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் தம்மை கைது செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தமக்கு முன்பிணை வழங்குமாறும் ஶ்ரீரங்கா சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார்.
எனினும், இந்த முன்பிணை கோரிக்கையை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
ஶ்ரீரங்காவின் முன்பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்காவின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலை இழிவுபடுத்தும் வகையில் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தமக்கு முன்பிணை வழங்குமாறு ஶ்ரீரங்கா நீதிமன்றில் கோரியிருந்தார்.இந்நிலையில், கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த விளக்கத்தை கருத்திற்கொண்டு ஶ்ரீரங்காவின் முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, பொலிஸார் தம்மை கைது செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தமக்கு முன்பிணை வழங்குமாறும் ஶ்ரீரங்கா சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார்.எனினும், இந்த முன்பிணை கோரிக்கையை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.