கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைக்கு வந்துள்ளதால், தற்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அந்த வகையில் குறைந்த வருமானம் உள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரண திட்டம் வழங்கி இருக்கிறது.
அதேபோன்று வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவதால், ரூபாவின் பெருமதி அதிகரித்து வருகிறது. அதன் பிரகாரம் பொருட்களின் விலை இருந்ததைவிட குறைவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கடனட்டை வட்டி வீதங்கள் குறைப்பு - மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை - அரச தரப்பு அறிவிப்பு கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுஅவர் இவ்வாறு தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைக்கு வந்துள்ளதால், தற்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில் குறைந்த வருமானம் உள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும நிவாரண திட்டம் வழங்கி இருக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவதால், ரூபாவின் பெருமதி அதிகரித்து வருகிறது. அதன் பிரகாரம் பொருட்களின் விலை இருந்ததைவிட குறைவடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.