• Nov 21 2024

கருமலை ஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்படும்- அருண் ஹேமச்சந்திரா உறுதி!

Tamil nila / Nov 10th 2024, 6:04 pm
image

2014 ஆம் ஆண்டு இனவாத ஆட்சியாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, தரை மட்டமாக்கப்பட்ட, திருகோணமலை கருமலைஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்த்துள்ளார்.

கருமலை ஊற்று பிரதேசத்தில் சனிக்கிழமை (9) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு கூறினார் .


அங்கு அவர் தொடர்ந்து கருத்து அறிவிக்கையில் , 

இனரீதியாக, மதரீதியாக சிந்திக்கின்ற சில விஷமிகளால் இந்த பள்ளிவாயல் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. இது ஒரு இனத்தின் மத உரிமை சார்ந்த விடயமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய ஆட்சி வந்த பிறகு, அந்தப் பள்ளிவாயல் இருந்த இடத்துக்குச் சென்று, அவற்ற தரிசித்து பார்வையிட்டு இருக்கிறோம். தற்போது இது சம்பந்தமாக உயர் மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம்.

நிச்சியமாக, எங்களுடைய ஆட்சி காலத்தில் இந்த விடயத்துக்கு விரைவாக நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுத்து , இந்தப் பிரதேச மக்களின் மத உரிமைகளை பேணிப் பாதுகாப்போம் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பில், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, மூடப்பட்டிருக்கின்ற பொது மக்களின் போக்குவரத்து வீதிகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட வீதிகளை திறப்பதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

திருகோணலை மாவட்டத்திலும் பல்வேறு வீதிகள் இவ்வாறு இராணுவ முகாம்களை மையப்படுத்தி, மூடப்பட்டிருக்கின்றன. இதற்கான உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் தற்போது இறங்கி இருக்கின்றோம். அந்த வகையிலே இதன் முன்னோடி நடவடிக்கையாக திருகோணமலை நகரின் 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ஒரு பிரதான வீதி இன்னும் சில தினங்களில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் கூறினார் .

திருகோணமலை மாவட்டத்தில், பல்வேறு பிரதேசங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் இலங்கை துறைமுக அதிகார சபையினால் சொந்தமானது என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவும் அவர் அங்கு கருத்து தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினை 1980 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தல் மூலம், இந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் மக்கள் அந்த காணிகளில் வசித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில், எந்த தீர்வும் இல்லாமல் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகின்றமை கவலையான விடயமே. இதில் முஸ்லிம், தமிழ், சிங்கள கிராமங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

லிங்கநகர், மட்கோ, பாலையூட்டு, பூம்புகார், சிங்கபுரம், சுமேதபுர, சின்னம்பிள்ளைசேனை, வெள்ளைமணல், கருமலைஊற்று, நாச்சிகுடா, கப்பல்துறை மற்றும் பாலைஊற்று ஆகிய கிராமங்களில் உள்ள காணிகளுக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது 


நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னரே இருந்து இதற்காக பல்வேறு குரல்களை இடைவிடாது எழுப்பி வந்தோம். இந்த நிலையில் தற்போது எங்களுக்கு ஜனாதிபதி அதிகாரம் கிடைத்திருக்கிறது. எதிர்வரும் 14ஆம் தேதி பாராளுமன்ற அதிகாரம் நிச்சயம் கிடைக்கப் போகின்றது.இந்த நிலையில், இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, விரைவாக நிரந்தரமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் அசமந்த போக்கும் மக்கள் நலனில் அக்கறையின்றி, சுயநலத்தில் அக்கறை கொண்ட, மாவட்ட அரசியல் தலைமைகளின் சுயநலப் போக்குமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனவைக்கான முக்கிய காரணங்களாகும்.

அரசியல்வாதிகளின் நலன்பேணும் ஆட்சி முறையே அப்போது நிலவியது இப்போதுதான் மக்களாட்சி தோற்றம் பெற்றிருக்கின்றது. எனவே குடிகளின் பிரச்சனைகள் குறித்து இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி குறித்தும் அவர், அந்த சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் முடிந்த கையோடு, ஊழலில் மோசமாக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள் எங்களை நாடி வந்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களை நிராகரித்து விட்டோம். ஏனெனில் மக்களின் தீர்ப்பை தான் நாங்கள் பெறுமதியாக கருதுகின்றோம்.

இதுவரைக்கும் சீர் கெட்ட அரசியல் கலாச்சாரத்துக்கு பங்காளியாக இருந்த எவரையும் நாங்கள் உள்வெடுக்கவில்லை. இதற்குப் பிறகும் நாங்கள் அவர்களை உள்ளெடுத்து அமைச்சர் பதவிகளை வழங்கப் போவதில்லை. பெரும்பான்மை பலத்தோடு நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. 

ஆனால், அரசியல் யாப்பு, இன, மதப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற முற்போக்கான பொதுவான விடயங்களில், தூய்மையான நல்ல சிந்தனை உள்ள அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, பாராளுமன்றத்தின் ஊடாக, தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வோம். 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில், மூன்று இன மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு, போனஸ் ஆசனத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், மூன்றாவது ஆசனத்தையும் பெற்றுக் கொள்வதற்காக அயராத முயற்சி செய்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார். 

கருமலை ஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்படும்- அருண் ஹேமச்சந்திரா உறுதி 2014 ஆம் ஆண்டு இனவாத ஆட்சியாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டு, தரை மட்டமாக்கப்பட்ட, திருகோணமலை கருமலைஊற்று பள்ளிவாசல், முஸ்லிம்களிடம் கையளிக்கப்பட்டு, அவர்களின் மத உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்த்துள்ளார்.கருமலை ஊற்று பிரதேசத்தில் சனிக்கிழமை (9) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு கூறினார் .அங்கு அவர் தொடர்ந்து கருத்து அறிவிக்கையில் , இனரீதியாக, மதரீதியாக சிந்திக்கின்ற சில விஷமிகளால் இந்த பள்ளிவாயல் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. இது ஒரு இனத்தின் மத உரிமை சார்ந்த விடயமாகும்.தேசிய மக்கள் சக்தியின் புதிய ஆட்சி வந்த பிறகு, அந்தப் பள்ளிவாயல் இருந்த இடத்துக்குச் சென்று, அவற்ற தரிசித்து பார்வையிட்டு இருக்கிறோம். தற்போது இது சம்பந்தமாக உயர் மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம்.நிச்சியமாக, எங்களுடைய ஆட்சி காலத்தில் இந்த விடயத்துக்கு விரைவாக நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுத்து , இந்தப் பிரதேச மக்களின் மத உரிமைகளை பேணிப் பாதுகாப்போம் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகின்றோம் என்றும் தெரிவித்தார்.மேலும் இந்த சந்திப்பில், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, மூடப்பட்டிருக்கின்ற பொது மக்களின் போக்குவரத்து வீதிகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட வீதிகளை திறப்பதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.திருகோணலை மாவட்டத்திலும் பல்வேறு வீதிகள் இவ்வாறு இராணுவ முகாம்களை மையப்படுத்தி, மூடப்பட்டிருக்கின்றன. இதற்கான உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் தற்போது இறங்கி இருக்கின்றோம். அந்த வகையிலே இதன் முன்னோடி நடவடிக்கையாக திருகோணமலை நகரின் 30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ஒரு பிரதான வீதி இன்னும் சில தினங்களில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் கூறினார் .திருகோணமலை மாவட்டத்தில், பல்வேறு பிரதேசங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் இலங்கை துறைமுக அதிகார சபையினால் சொந்தமானது என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவும் அவர் அங்கு கருத்து தெரிவித்தார். இந்தப் பிரச்சினை 1980 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தல் மூலம், இந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.1980 ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் மக்கள் அந்த காணிகளில் வசித்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில், எந்த தீர்வும் இல்லாமல் இந்த பிரச்சினை தொடர்ந்து வருகின்றமை கவலையான விடயமே. இதில் முஸ்லிம், தமிழ், சிங்கள கிராமங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.லிங்கநகர், மட்கோ, பாலையூட்டு, பூம்புகார், சிங்கபுரம், சுமேதபுர, சின்னம்பிள்ளைசேனை, வெள்ளைமணல், கருமலைஊற்று, நாச்சிகுடா, கப்பல்துறை மற்றும் பாலைஊற்று ஆகிய கிராமங்களில் உள்ள காணிகளுக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னரே இருந்து இதற்காக பல்வேறு குரல்களை இடைவிடாது எழுப்பி வந்தோம். இந்த நிலையில் தற்போது எங்களுக்கு ஜனாதிபதி அதிகாரம் கிடைத்திருக்கிறது. எதிர்வரும் 14ஆம் தேதி பாராளுமன்ற அதிகாரம் நிச்சயம் கிடைக்கப் போகின்றது.இந்த நிலையில், இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, விரைவாக நிரந்தரமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களின் அசமந்த போக்கும் மக்கள் நலனில் அக்கறையின்றி, சுயநலத்தில் அக்கறை கொண்ட, மாவட்ட அரசியல் தலைமைகளின் சுயநலப் போக்குமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனவைக்கான முக்கிய காரணங்களாகும்.அரசியல்வாதிகளின் நலன்பேணும் ஆட்சி முறையே அப்போது நிலவியது இப்போதுதான் மக்களாட்சி தோற்றம் பெற்றிருக்கின்றது. எனவே குடிகளின் பிரச்சனைகள் குறித்து இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி குறித்தும் அவர், அந்த சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் முடிந்த கையோடு, ஊழலில் மோசமாக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள் எங்களை நாடி வந்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களை நிராகரித்து விட்டோம். ஏனெனில் மக்களின் தீர்ப்பை தான் நாங்கள் பெறுமதியாக கருதுகின்றோம்.இதுவரைக்கும் சீர் கெட்ட அரசியல் கலாச்சாரத்துக்கு பங்காளியாக இருந்த எவரையும் நாங்கள் உள்வெடுக்கவில்லை. இதற்குப் பிறகும் நாங்கள் அவர்களை உள்ளெடுத்து அமைச்சர் பதவிகளை வழங்கப் போவதில்லை. பெரும்பான்மை பலத்தோடு நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அரசியல் யாப்பு, இன, மதப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற முற்போக்கான பொதுவான விடயங்களில், தூய்மையான நல்ல சிந்தனை உள்ள அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி, பாராளுமன்றத்தின் ஊடாக, தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வோம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில், மூன்று இன மக்களின் பெரும்பான்மை ஆதரவோடு, போனஸ் ஆசனத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், மூன்றாவது ஆசனத்தையும் பெற்றுக் கொள்வதற்காக அயராத முயற்சி செய்து வருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement