கொழும்பு - பொரளை மயானத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் தகன நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் புதைகுழி மூலம் செய்யப்படும் இறுதிக்கிரியைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தகனக் கிரியைக்காக வரும் சடலங்கள் ஜாவத்த மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையானது, எரிவாயு விலை அதிகரிப்பினை தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிவாயு இருப்பானது மீள் நிரப்படுவதோடு இரண்டு நாட்களில் தகனக்கிரியை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொரளை மயானத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்ட தகனக்கிரியைகள். வெளியான அதிர்ச்சிக் காரணம் கொழும்பு - பொரளை மயானத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் தகன நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் புதைகுழி மூலம் செய்யப்படும் இறுதிக்கிரியைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், தகனக் கிரியைக்காக வரும் சடலங்கள் ஜாவத்த மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையானது, எரிவாயு விலை அதிகரிப்பினை தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இன்றைய தினம் எரிவாயு இருப்பானது மீள் நிரப்படுவதோடு இரண்டு நாட்களில் தகனக்கிரியை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.