• Nov 22 2024

கொள்ளுப்பிட்டியில் பொலிஸாரின் அடாவடித்தனம் – டிரான் அலஸ் விசாரணைக்கு உத்தரவு..!samugammedia

mathuri / Jan 6th 2024, 10:36 am
image

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இரண்டு இளைஞர்கள் சோதனை என்ற பெயரில் மோசமான முறையில் நடத்தப்பட்டமை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு பொறுப்புக்கூறுதல் நீதியை உறுதிப்படுத்துவதற்காக குற்றவாளிகள் என இனம் காணப்படுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்

இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் மறித்துள்ளனர். இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார். 

விசாரணை மேற்கொள்வதற்கான உரிய காரணத்தை தெரிவிக்காது, நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டுள்ளதோடு  கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரிடம்பொலிஸாரால் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்த  விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என  தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் பொலிஸாரின் அடாவடித்தனம் – டிரான் அலஸ் விசாரணைக்கு உத்தரவு.samugammedia கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இரண்டு இளைஞர்கள் சோதனை என்ற பெயரில் மோசமான முறையில் நடத்தப்பட்டமை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு பொறுப்புக்கூறுதல் நீதியை உறுதிப்படுத்துவதற்காக குற்றவாளிகள் என இனம் காணப்படுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் மறித்துள்ளனர். இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார். விசாரணை மேற்கொள்வதற்கான உரிய காரணத்தை தெரிவிக்காது, நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டுள்ளதோடு  கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரிடம்பொலிஸாரால் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்த  விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என  தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement