• Nov 28 2024

யாழில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள்...! தேடுதல் வேட்டை தொடரும்...! பொலிஸார் அறிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 23rd 2023, 11:37 am
image

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்துள்ளதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலும் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  நூற்றுக்கணக்காணோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களில் மட்டும் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும். போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த  தெரிவித்துள்ளார்.

அதேவேளை போதைப்பொருள் தொடர்பான கைதுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், யாழ்  மாவட்டத்தில் ஏனைய குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

பெரும்பாலான குற்றச்செயல்கள் போதைக்கு அடிமையானவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர்,  பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

யாழில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள். தேடுதல் வேட்டை தொடரும். பொலிஸார் அறிவிப்பு.samugammedia யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்துள்ளதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலும் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  நூற்றுக்கணக்காணோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில நாள்களில் மட்டும் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும். போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த  தெரிவித்துள்ளார்.அதேவேளை போதைப்பொருள் தொடர்பான கைதுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், யாழ்  மாவட்டத்தில் ஏனைய குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலான குற்றச்செயல்கள் போதைக்கு அடிமையானவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்த அவர்,  பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement