• Sep 21 2024

எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை- 19 இந்திய மீனவர்கள் விடுதலை 9 பேருக்கு விளக்கமறியல்..!

Sharmi / Aug 6th 2024, 6:13 pm
image

Advertisement

கடந்த ஜூன் 22ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர். 

அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் 1 வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேவேளை, ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை- 19 இந்திய மீனவர்கள் விடுதலை 9 பேருக்கு விளக்கமறியல். கடந்த ஜூன் 22ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர். அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் 1 வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.அதேவேளை, ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement