தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என சுங்க அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் சுகயீன விடுமுறைபோராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொண்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்
சுங்க கட்டளை சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்
எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் காலி துறைமுகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர்
இதேவேளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதில் தொடர்ந்தும் தாமதம் தேங்கியுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் குதித்த சுங்க அதிகாரிகள்; இறக்குமதி பொருட்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல். தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என சுங்க அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் சுகயீன விடுமுறைபோராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொண்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்சுங்க கட்டளை சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் காலி துறைமுகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர்இதேவேளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதில் தொடர்ந்தும் தாமதம் தேங்கியுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.