• Nov 26 2024

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு? இறுதி முடிவு எட்டப்படுமா..?

Chithra / Feb 29th 2024, 2:41 pm
image

  

மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின் கூற்றுக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வாடிக்கையாளர் பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (28) கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று (29) இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளைய தினத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரக் கட்டணம் 14 வீதத்தால் குறைப்பு இறுதி முடிவு எட்டப்படுமா.   மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 14 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.குறித்த தீர்மானமானது, மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க முடியும் என்ற எரிசக்தி அமைச்சரின் கூற்றுக்கு முரணாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர் பிரிவினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (28) கூட்டம் நடத்திய போதிலும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் கலைந்து சென்றதுடன் இன்று (29) இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், மின் கட்டண திருத்தம் தொடர்பில் நாளைய தினத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement