• May 07 2024

இணையப் பாதுகாப்புச் சட்டம் நாட்டிற்கு அவசியம்..! அமைச்சர் அலி சப்ரி

Chithra / Feb 25th 2024, 12:12 pm
image

Advertisement

 

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்போது இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கின்ற சில உட்பிரிவுகள் குறித்து பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அரசாங்கம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதி இராஜாங்கச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்புச் சட்டம் நாட்டிற்கு அவசியம். அமைச்சர் அலி சப்ரி  இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இதன்போது இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கின்ற சில உட்பிரிவுகள் குறித்து பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில், அரசாங்கம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதி இராஜாங்கச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement