• Nov 22 2024

அமைச்சர் அறிவித்த தேர்தல் திகதி - முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணையம்

Tharun / Jun 16th 2024, 6:32 pm
image

எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முற்றாக மறுத்துள்ளார்.

தேர்தல் அட்டவணையை தயாரிக்க அமைச்சரவைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரம் இல்லை என வலியுறுத்திய ரத்நாயக்க, “ஜூலை 17 முதல் தேர்தல் திகதியை தீர்மானிக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

"அமைச்சரவை அல்லது அதிபர் உட்பட எந்தவொரு வெளி நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறாமல் நாங்கள் திகதியை பகிரங்கமாக அறிவிப்போம்."

செப்டம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தல் நடைமுறைகளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் வரையான தயாரிப்புக் காலம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் விளக்கினார்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் 17-21 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 


அமைச்சர் அறிவித்த தேர்தல் திகதி - முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணையம் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முற்றாக மறுத்துள்ளார்.தேர்தல் அட்டவணையை தயாரிக்க அமைச்சரவைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரம் இல்லை என வலியுறுத்திய ரத்நாயக்க, “ஜூலை 17 முதல் தேர்தல் திகதியை தீர்மானிக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள்” என்று குறிப்பிட்டார்."அமைச்சரவை அல்லது அதிபர் உட்பட எந்தவொரு வெளி நிறுவனத்திடமிருந்தும் அனுமதி பெறாமல் நாங்கள் திகதியை பகிரங்கமாக அறிவிப்போம்."செப்டம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தல் நடைமுறைகளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் வரையான தயாரிப்புக் காலம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் விளக்கினார்.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் 17-21 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement