பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மார்ச் 31ஆம் திகதிவரை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் இணைந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பொருத்தமான வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரையிலும் வணிக வங்கிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடாத தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் மறுசீரமைப்புக்காக இன்றுவரை சந்தர்ப்பமுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கால அவகாசம் இன்றுடன் நிறைவு - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மார்ச் 31ஆம் திகதிவரை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டது.உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் இணைந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பொருத்தமான வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரையிலும் வணிக வங்கிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடாத தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் மறுசீரமைப்புக்காக இன்றுவரை சந்தர்ப்பமுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.