• Dec 17 2025

அமெரிக்க பல்கலைக்கழத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு; இருவர் பலி - 8 பேர் படுகாயம்

Chithra / Dec 14th 2025, 11:00 am
image

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்  எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


சந்தேக நபர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் என்பதைத் தவிர மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. 


பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் இந்த சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென உறுதியான நிலையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது

அமெரிக்க பல்கலைக்கழத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு; இருவர் பலி - 8 பேர் படுகாயம் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்  எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் என்பதைத் தவிர மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. பிரவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் இந்த சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென உறுதியான நிலையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது

Advertisement

Advertisement

Advertisement