வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் தயாரிப்பாளராகவுள்ள ஒருவரின் வீட்டில் புணிபுரிந்த பெண்மீது திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இது தொடர்பில் வெளியாகும் ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டு தானாகவே முன்வந்து இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர், வெலிக்கடை பொலிஸ் சம்பவம் தொடர்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சம்பவத்தில் பதுளை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலில் காயங்கள் உள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கணவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணின் உயிரிழப்பு- தானாகவே களமிறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு samugammedia வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் தயாரிப்பாளராகவுள்ள ஒருவரின் வீட்டில் புணிபுரிந்த பெண்மீது திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.இது தொடர்பில் வெளியாகும் ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டு தானாகவே முன்வந்து இந்த விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர், வெலிக்கடை பொலிஸ் சம்பவம் தொடர்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.சம்பவத்தில் பதுளை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலில் காயங்கள் உள்ளதாகவும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கணவர் தெரிவித்துள்ளார்.