கொழும்பு - பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆராவல கொஸ்கஹஹேன பகுதியைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சிறுவனின் தாய் ஒரு வருடத்திற்கு முன் உயிரிழந்ததையடுத்து தனது தந்தை மற்றும் சகோதரியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
தாயின் உயிரிழப்பை அடுத்து தனது மகன் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு, சிறுவனின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதன்படி சிறுவனின் சகோதரி தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் சிறுவன் மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரி வீடு திரும்பிய போது,
சிறுவன் வீட்டில் இல்லாத காரணத்தினால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,
தாய் மரணம்; தந்தை வைத்தியசாலையில் மர்மமான முறையில் மாயமான 15 வயது மகன் கொழும்பில் சம்பவம் கொழும்பு - பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆராவல கொஸ்கஹஹேன பகுதியைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.சிறுவனின் தாய் ஒரு வருடத்திற்கு முன் உயிரிழந்ததையடுத்து தனது தந்தை மற்றும் சகோதரியுடன் அவர் வசித்து வந்துள்ளார்.தாயின் உயிரிழப்பை அடுத்து தனது மகன் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் தந்தை கூறியுள்ளார்.இந்நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு, சிறுவனின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.இதன்படி சிறுவனின் சகோதரி தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் சிறுவன் மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.இந்நிலையில் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரி வீடு திரும்பிய போது,சிறுவன் வீட்டில் இல்லாத காரணத்தினால் உறவினர்களும் அயலவர்களும் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய பொலிஸார் சிறுவனை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.