உளவு பார்த்த குற்றச்சாட்டில் கட்டாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனையை கட்டார் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) ரத்து செய்துள்ளது.
டுபாயில் இடம்பெற்ற COP28 கூட்டத்தின் போது கட்டாரின் மன்னர் Emir HH Sheikh Tamim bin Hamad Al Thani இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இன்று (28) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளின் நிலைமைகள் தொடர்பான அடுத்த படிகளை தீர்மானிக்க சட்டப் பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கின் நடவடிக்கைகள் இரகசியமான மற்றும் உணர்திறன் மிக்கவை என்பதன் காரணமாக இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை ரத்து.samugammedia உளவு பார்த்த குற்றச்சாட்டில் கட்டாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனையை கட்டார் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) ரத்து செய்துள்ளது.டுபாயில் இடம்பெற்ற COP28 கூட்டத்தின் போது கட்டாரின் மன்னர் Emir HH Sheikh Tamim bin Hamad Al Thani இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வெளியாகியுள்ளது.இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு இன்று (28) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அதிகாரிகளின் நிலைமைகள் தொடர்பான அடுத்த படிகளை தீர்மானிக்க சட்டப் பிரதிநிதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணுவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.இந்த வழக்கின் நடவடிக்கைகள் இரகசியமான மற்றும் உணர்திறன் மிக்கவை என்பதன் காரணமாக இந்த நேரத்தில் மேலும் எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.