• Dec 02 2024

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நீடிக்க தீர்மானம் - சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

Chithra / Dec 2nd 2024, 11:56 am
image

 

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார்.

தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த தகவல்களை தனது பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால் தொற்றுநோய்க்கான உடனடி பதிலளிப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் இந்த பிரிவில், தட்டம்மை உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்து மக்கள் விசாரிக்க முடியும்.

011-744 65 13, 011-768 27 22, 011-768 28 72 அல்லது 011-768 26 62 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நீடிக்க தீர்மானம் - சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு  தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த மாதம் 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார்.தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த தகவல்களை தனது பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால் தொற்றுநோய்க்கான உடனடி பதிலளிப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் இந்த பிரிவில், தட்டம்மை உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்து மக்கள் விசாரிக்க முடியும்.011-744 65 13, 011-768 27 22, 011-768 28 72 அல்லது 011-768 26 62 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement