• Dec 18 2024

சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்துங்கள்; கிளிநொச்சியில் கவனயீர்ப்பும், மாநாடும்

Chithra / Dec 18th 2024, 11:38 am
image

  

சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பும், மாநாடும் இன்று கிளிநொச்சியில் இடபெற்றது.

இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி, கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில் இலங்கை பூராகவும் உள்ள விழிப்புணர்வற்றோர் சங்கங்கள் பங்குபற்றினர்.

தொடர்ந்து, பசுமைப்பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ஷிவானி சண்முகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆளுநருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.



சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்துங்கள்; கிளிநொச்சியில் கவனயீர்ப்பும், மாநாடும்   சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பும், மாநாடும் இன்று கிளிநொச்சியில் இடபெற்றது.இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி, கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.குறித்த விழிப்புணர்வு பேரணியில் இலங்கை பூராகவும் உள்ள விழிப்புணர்வற்றோர் சங்கங்கள் பங்குபற்றினர்.தொடர்ந்து, பசுமைப்பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டிருந்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஷிவானி சண்முகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதன்போது ஆளுநருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement