நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் மூலம் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டு வரப்பட்டு குப்புளானில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு விதைகள் பற்றீரியா தொற்றுக்கு உள்ளாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த உருளைக் கிழங்கு விதைகள் நேற்றிரவு கிளிநொச்சியில் புதைக்கப்பட்டது.
முருகண்டி அக்கராயன் வீதியின் 5வது மைல் கல்லிருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள காட்டில் புதைக்கப்பட்டது.
இதன்போது நவீன விவசாய விரிவாக்க திட்டத்தின் வடமாகாண பிரதிப்பணிப்பாளர் விஜயகுமார் விஜீதரன்,யாழ் மாவட்ட. விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரஞ்சன்,திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பாலகெளரி பவளலேஸ்வரன், திருநெல்வேலி விதைகள் அத்தாட்சிப்படுத்தும் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அ.ரமணிதரன் ஆகியோரின் முன்னிலையில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழிற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள் கிளிநொச்சியில் புதைப்பு.samugammedia நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் மூலம் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டு வரப்பட்டு குப்புளானில் உள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு விதைகள் பற்றீரியா தொற்றுக்கு உள்ளாகியிருந்தன.இந்நிலையில் குறித்த உருளைக் கிழங்கு விதைகள் நேற்றிரவு கிளிநொச்சியில் புதைக்கப்பட்டது. முருகண்டி அக்கராயன் வீதியின் 5வது மைல் கல்லிருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள காட்டில் புதைக்கப்பட்டது. இதன்போது நவீன விவசாய விரிவாக்க திட்டத்தின் வடமாகாண பிரதிப்பணிப்பாளர் விஜயகுமார் விஜீதரன்,யாழ் மாவட்ட. விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரஞ்சன்,திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பாலகெளரி பவளலேஸ்வரன், திருநெல்வேலி விதைகள் அத்தாட்சிப்படுத்தும் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அ.ரமணிதரன் ஆகியோரின் முன்னிலையில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.