2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே எம் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர். தமிழீழம் நோக்கிய போராட்டம் அரசியல் மயமாக்கப்பட்டு உலகம் பூராகவும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் அதற்கான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக தமிழரின் தலை விதியினை தமிழரே தீர்மானிக்கின்ற பொது வாக்கெடுப்பினை "Yes to Referendum" நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினையும் உலக நாடுகளையும் வலியுத்தி வரும் இந்த நேரத்தில் பொது வாக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (01) புத்தாண்டை முன்னிட்டு பிரித்தானியாவில் பல ஆலயங்களில் மாதிரி வாக்கெடுப்பு மற்றும் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினால் இம் மாதிரி வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இம் மாதிரி வாக்கெடுப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.
நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்காளித்த மொத்த வாக்குகளில்
96% மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பதாக்கவும்
2% மக்கள் 13ம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக்கவும்
1% மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாகவும்
1% வேறு தெரிவுக்குமாக தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தனர்.
தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் காலம் வரும்போது எம் இளம் தலைமுறையினர் அதில் தாங்களும் பங்கு கொள்ளவேண்டும் என்ற தூர நோக்குடனே இது போன்ற மாதிரி பொது வாக்கெடுப்புகள் "பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினரால்" உலகம் பூராக்கவும் நடாத்தப்பாட்டு வருகின்றது.
புலம்பெயர் நாடுகளில் தொடரும் அரசியல் போராட்டம் - மாதிரி பொது வாக்கெடுப்பு.samugammedia 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே எம் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர். தமிழீழம் நோக்கிய போராட்டம் அரசியல் மயமாக்கப்பட்டு உலகம் பூராகவும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் அதற்கான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு அங்கமாக தமிழரின் தலை விதியினை தமிழரே தீர்மானிக்கின்ற பொது வாக்கெடுப்பினை "Yes to Referendum" நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினையும் உலக நாடுகளையும் வலியுத்தி வரும் இந்த நேரத்தில் பொது வாக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (01) புத்தாண்டை முன்னிட்டு பிரித்தானியாவில் பல ஆலயங்களில் மாதிரி வாக்கெடுப்பு மற்றும் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினால் இம் மாதிரி வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இம் மாதிரி வாக்கெடுப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்காளித்த மொத்த வாக்குகளில்96% மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பதாக்கவும்2% மக்கள் 13ம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக்கவும் 1% மக்கள் சமஸ்டிக்கு ஆதரவாகவும்1% வேறு தெரிவுக்குமாக தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தனர். தமிழரின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்கும் காலம் வரும்போது எம் இளம் தலைமுறையினர் அதில் தாங்களும் பங்கு கொள்ளவேண்டும் என்ற தூர நோக்குடனே இது போன்ற மாதிரி பொது வாக்கெடுப்புகள் "பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினரால்" உலகம் பூராக்கவும் நடாத்தப்பாட்டு வருகின்றது.