• Nov 26 2024

நாடாளுமன்ற நேரலையை தாமதமாக்குங்கள்! சஜித்தால் நேர்ந்த நிலை: நாமல் கோரிக்கை

Chithra / Dec 11th 2023, 1:11 pm
image

 

நாடாளுமன்ற அமர்வுகளை நேரலைக்குப் பதிலாக தாமதமாக ஒளிபரப்புமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

நேற்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச நேரடி ஒளிபரப்பை நிறுத்தி அரை மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேறு பூசும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் முக்கியமற்ற விடயங்களைப் பேசுவதற்கும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்துகின்றனர். 

இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது, என்றார்.

அண்மையில் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பாலும் கிரிக்கெட் பற்றியே பேசியதாக சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச,

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் போது நாடாளுமன்றம் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற நேரலையை தாமதமாக்குங்கள் சஜித்தால் நேர்ந்த நிலை: நாமல் கோரிக்கை  நாடாளுமன்ற அமர்வுகளை நேரலைக்குப் பதிலாக தாமதமாக ஒளிபரப்புமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.நேற்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச நேரடி ஒளிபரப்பை நிறுத்தி அரை மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பை வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேறு பூசும் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் முக்கியமற்ற விடயங்களைப் பேசுவதற்கும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்துகின்றனர்.அவர்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்க நேரிடுகிறது, என்றார்.அண்மையில் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பாலும் கிரிக்கெட் பற்றியே பேசியதாக சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச,2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் போது நாடாளுமன்றம் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement