• May 17 2024

டெலிவரி போயின் 800 ஆண்டுகள் பழமையான ஆன்மீக காதலி காதல் மம்மி மீட்பு!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 3:14 pm
image

Advertisement

உணவு டெலிவரி செய்யும் நபரின்  பையிலிருந்து சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று மீட்கப்பட்டமை அந்த நாட்டினையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.

 பெரு  நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ (26) என்பவர் உணவினை டெலிவரி செய்யும் வேலையினை  பார்த்து வந்துள்ளார். ஒரு நாள் இவர் தனது நண்பர்களுடன் பூங்காவில் ஒன்றில்  மது அருந்தி கொண்டிருந்த வேளை அங்கு வந்த பொலிஸார்   சீசர்  வைத்திருந்த உணவு டெலிவரி பையினை  திறந்து பார்த்துள்ளனர். அந்த பையில்  மம்மி   ஒன்றின் உடல் இருப்பதைக் கண்ட  பொலிஸார்  அதிர்ச்சியடைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

 விசாரணையின் போது அந்த  மம்மியை அவரது அப்பா 30 வருடங்களுக்கு முன்னர்  வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார் என குறைய சீசர்,   அது  "தனது ஆன்மீக காதலி" எனவும் கூறியதுடன்  தான்  அவளோடு உரையாடுவதாகவும், தனது  அறையிலே அது  இருப்பதுடன்  அதனுடன் தான் தூங்குவேன்  என்றும்,
 அத்தோடு அதனை தனது நண்பர்களிற்கு காட்டவே கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து அவரிடமிருந்த மம்மியை பறிமுதல் செய்த  பொலிஸார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த நிலையில்  மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைப்பு 45 வயது மதிக்க தக்க  இறந்த ஆண் நபரின் உடலென்றும்,  600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதுடன் மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்தோடு குறித்த  மம்மியை  பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பெரு அரசு  தெரிவித்துள்ளது.

டெலிவரி போயின் 800 ஆண்டுகள் பழமையான ஆன்மீக காதலி காதல் மம்மி மீட்புSamugamMedia உணவு டெலிவரி செய்யும் நபரின்  பையிலிருந்து சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று மீட்கப்பட்டமை அந்த நாட்டினையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.  பெரு  நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ (26) என்பவர் உணவினை டெலிவரி செய்யும் வேலையினை  பார்த்து வந்துள்ளார். ஒரு நாள் இவர் தனது நண்பர்களுடன் பூங்காவில் ஒன்றில்  மது அருந்தி கொண்டிருந்த வேளை அங்கு வந்த பொலிஸார்   சீசர்  வைத்திருந்த உணவு டெலிவரி பையினை  திறந்து பார்த்துள்ளனர். அந்த பையில்  மம்மி   ஒன்றின் உடல் இருப்பதைக் கண்ட  பொலிஸார்  அதிர்ச்சியடைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.  விசாரணையின் போது அந்த  மம்மியை அவரது அப்பா 30 வருடங்களுக்கு முன்னர்  வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார் என குறைய சீசர்,   அது  "தனது ஆன்மீக காதலி" எனவும் கூறியதுடன்  தான்  அவளோடு உரையாடுவதாகவும், தனது  அறையிலே அது  இருப்பதுடன்  அதனுடன் தான் தூங்குவேன்  என்றும், அத்தோடு அதனை தனது நண்பர்களிற்கு காட்டவே கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவரிடமிருந்த மம்மியை பறிமுதல் செய்த  பொலிஸார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த நிலையில்  மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைப்பு 45 வயது மதிக்க தக்க  இறந்த ஆண் நபரின் உடலென்றும்,  600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதுடன் மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு குறித்த  மம்மியை  பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பெரு அரசு  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement