• Nov 22 2024

வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..!

Sharmi / Oct 16th 2024, 11:50 am
image

முல்லைத்தீவு பரந்தன் A 35 வீதியிலுள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பொக்கணை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பரந்தன் A 35 வீதியில் மிக நீண்ட நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்குள்ளாகியது.

தற்போது குறித்த பாலம் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த பாலம் தொடர்பில்  கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களிலும் இந்த விடயம் இந்த பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை. முல்லைத்தீவு பரந்தன் A 35 வீதியிலுள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பொக்கணை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு பரந்தன் A 35 வீதியில் மிக நீண்ட நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்குள்ளாகியது.தற்போது குறித்த பாலம் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.குறித்த பாலம் தொடர்பில்  கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களிலும் இந்த விடயம் இந்த பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில் குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement