• May 20 2024

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 1:49 pm
image

Advertisement

யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக  போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மகா சபை தலைவரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி தொடர்பில் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான  வீதியானது 30 வருட யுத்தத்தில் முழுமையாக  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ரணில் பிரதமராகவும் மைத்திரி ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் குறித்த வீதி திருத்த பணிகள் இடம்பெற்றன.

இதில் ஆரம்ப தினத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் வருகை தந்து நடுகல் திரை நீக்கம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

குறித்த  மருதங்கேணி  பருத்தித்துறை வீதி 32 கிலோ மீட்டரில் 16 கிலோ மீட்டர்  வீதி தான் திருத்த பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுருந்தது.

ஒரு கிலோமீட்டர் வீதி  திருத்தம் செய்வதற்கு எட்டு கோடியே இரண்டு  இலட்சத்து  92 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டு தொடக்கம்  வேலைகள் இடம்பெற்றாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தான் குறித்த வீதி திருத்த வேலைகள் நிறைவு படுத்தப்பட்டன.ஒரு பக்கத்தால் வேலைகள் நிறைவு பெறுகின்ற நிலையில் மறுபக்கத்தால் வீதி பழுதடைந்த நிலைமைகளே  காணப்பட்டது. உங்களுக்கு தெரியும் கார்பெட் வீதியில் பனைமரம் முளைத்திருக்கிறது, டிப்பர் வாகனம் ஒன்று பிண்ணையடி   என்கின்ற பகுதியில் புதைந்து காணப்பட்டது.

அதாவது போடப்பட்ட வீதியில் டிப்பர் வாகனம் புதைந்து காணப்பட்டது. குறித்த பதினாறு கிலோமீட்டர் வீதியில் அம்பன் வைத்தியசாலையிலிருந்து இராணுவ காவலரண் வரை உள்ள ஒரு கிலோமீட்டர் வீதி மட்டும் தான் எந்தவித சேதமும் இல்லாமல் காணப்படுகிறது.

அதே போன்று செம்பியன்பற்றலிருந்து மருதங்கேணி சந்திவரையான. கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வீதிதான் பழுதடையாமல் காணப்படுகிறது. குறிப்பாக ஏனைய பதினொரு கிலோ மீட்டர் வீதி குன்றும் குழியும், பள்ளமும் திட்டியுமாகவே காணப்படுகிறது.

வீதிகள் வெட்டப்பட்டு காணப்படுகிறது. இதனால் பயணிகள்  பல்வேறு பாதிப்புகளை  எதிர்நோக்கி வருகிறார்கள்.எந்தவித வீதி அடையாளங்களோ அறிவுப்புக்களோ  எதுவுமே காணப்படவில்லை. விபத்துகளும்  பெற்று வருகின்றன.போக்குவரத்து செய்ய முடியாமல் காணப்படுகிறது.  பேரளவில் மட்டும் தான் இது காப்பெட் வீதியாக காணப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்கவில்லை. வீதி ஒவ்வொரு கிலோமீட்டர் வீதம் பல  ஒப்பந்ததாரர்களுக்கு வீதி பிரித்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சில ஒப்பந்தகாரர்கள் வீதியின் பக்கங்களில் கருங்கல் அடுக்கப்பட்டு கிரவல் மண் நிரப்பினார்கள். சிலர் வடமராட்சி கிழக்கு மண். அதாவது கூடாரப்பு மண்ணை எடுத்து நிரப்பி வீதியை போட்டார்கள்.

பல்வேறு காரணங்களால் வீதி முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இது  யாழ்  மாவட்டமாக இருந்தாலும் வீதி பராமரிப்பு கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்படுகிறது.

அதாவது அம்பனிலிருந்து ஏனைய பகுதிகள் கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நிர்வாக ஆளுகைக்குள் உட்படுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொறுப்புக் கூற வேண்டும்.  பல தடவைகள் இது விடயமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதைத்தும் அவர்கள் சாட்டு போக்கு சொல்லி அதனை மழுங்கடித்து செல்வதையே காண முடிகிறது.

இந்த வகையில் குறித்த வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவராக இருந்தாலும் வருக தந்த பார்வையிட முடியும்.  எனவே குறித்த  வீதி  கட்டாயம் செப்பனிடப்பட வேண்டும்.

இந்த வீதியை வைத்து பலர் கொள்ளை அடித்திருக்கிறார்கள்  என்கின்ற சந்தேகங்களுக்கு எழுகிறது.

ஒரு கிலோமீட்டர் வீதி செப்பநிடபடுவதற்கு எட்டு கோடியே 2 லட்சத்து 93  ஆயிரம் செலவு என்றால் 16 கிலோமீட்டர் வீதி திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு பணம் செலவாகியருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்ட பாருங்கள்.ஆனால் குறித்த  வீதிக்கு செலவழித்த நிதி அளவுக்கு இந்த வேலைகள் இடம்பெறவில்லை.தற்போது மாமுனையிலிருந்து கட்டைக்காடு வரையான  வீதி சொப்பனிடப்பட்டிருக்கிறது.

அது மிகவும் தரமாக செப்பனிடப்பட்டிருக்கிறது.அதில் எந்தவித பமுதுகளோ ஏதும் இருக்கவில்லை.அந்த வீதியோடு ஒப்பிடுகிற போது பத்தித்துறை மருதங்கேணி  வீதி மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. மாமுனை கட்டைக்காடு வீதியோடு ஒப்பிடுகிற போது குறித்த மருதங்கேணி  பருத்தித்துறை வீதி 5 வீதம் கூட சரியானதாக இருக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம்  எடுத்து வீதி அபிவிருத்தி  திணைக்களமாக இருக்கலாம்,  வீதி அபிவிருத்தி அதிகார சபையாக இருக்கலாம், அல்லது மாவட்ட செயலாளராக இருக்கலாம், அல்லது வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலாளராக இருக்கலாம்,  அல்லது பருத்தித்துறை பிரதேச சபையோ அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளோ இதில் அமைச்சர்கள், அரசியல்வாதிகளோ அனைவரும் கவனம் எடுத்து, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அல்லது காரணம் சொல்லப்பட வேண்டும்.  எனவே இது தொடர்பில் உரியவர்கள்  பொறுப்பு கூறாவிடில் மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்றார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்samugammedia யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக  போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மகா சபை தலைவரும் யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவித்துள்ளார்.குறித்த வீதி தொடர்பில் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான  வீதியானது 30 வருட யுத்தத்தில் முழுமையாக  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ரணில் பிரதமராகவும் மைத்திரி ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் குறித்த வீதி திருத்த பணிகள் இடம்பெற்றன.இதில் ஆரம்ப தினத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் வருகை தந்து நடுகல் திரை நீக்கம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.குறித்த  மருதங்கேணி  பருத்தித்துறை வீதி 32 கிலோ மீட்டரில் 16 கிலோ மீட்டர்  வீதி தான் திருத்த பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுருந்தது.ஒரு கிலோமீட்டர் வீதி  திருத்தம் செய்வதற்கு எட்டு கோடியே இரண்டு  இலட்சத்து  92 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.2016 ஆம் ஆண்டு தொடக்கம்  வேலைகள் இடம்பெற்றாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் தான் குறித்த வீதி திருத்த வேலைகள் நிறைவு படுத்தப்பட்டன.ஒரு பக்கத்தால் வேலைகள் நிறைவு பெறுகின்ற நிலையில் மறுபக்கத்தால் வீதி பழுதடைந்த நிலைமைகளே  காணப்பட்டது. உங்களுக்கு தெரியும் கார்பெட் வீதியில் பனைமரம் முளைத்திருக்கிறது, டிப்பர் வாகனம் ஒன்று பிண்ணையடி   என்கின்ற பகுதியில் புதைந்து காணப்பட்டது.அதாவது போடப்பட்ட வீதியில் டிப்பர் வாகனம் புதைந்து காணப்பட்டது. குறித்த பதினாறு கிலோமீட்டர் வீதியில் அம்பன் வைத்தியசாலையிலிருந்து இராணுவ காவலரண் வரை உள்ள ஒரு கிலோமீட்டர் வீதி மட்டும் தான் எந்தவித சேதமும் இல்லாமல் காணப்படுகிறது.அதே போன்று செம்பியன்பற்றலிருந்து மருதங்கேணி சந்திவரையான. கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வீதிதான் பழுதடையாமல் காணப்படுகிறது. குறிப்பாக ஏனைய பதினொரு கிலோ மீட்டர் வீதி குன்றும் குழியும், பள்ளமும் திட்டியுமாகவே காணப்படுகிறது.வீதிகள் வெட்டப்பட்டு காணப்படுகிறது. இதனால் பயணிகள்  பல்வேறு பாதிப்புகளை  எதிர்நோக்கி வருகிறார்கள்.எந்தவித வீதி அடையாளங்களோ அறிவுப்புக்களோ  எதுவுமே காணப்படவில்லை. விபத்துகளும்  பெற்று வருகின்றன.போக்குவரத்து செய்ய முடியாமல் காணப்படுகிறது.  பேரளவில் மட்டும் தான் இது காப்பெட் வீதியாக காணப்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்கவில்லை. வீதி ஒவ்வொரு கிலோமீட்டர் வீதம் பல  ஒப்பந்ததாரர்களுக்கு வீதி பிரித்து கொடுக்கப்பட்டது.இந்நிலையில் சில ஒப்பந்தகாரர்கள் வீதியின் பக்கங்களில் கருங்கல் அடுக்கப்பட்டு கிரவல் மண் நிரப்பினார்கள். சிலர் வடமராட்சி கிழக்கு மண். அதாவது கூடாரப்பு மண்ணை எடுத்து நிரப்பி வீதியை போட்டார்கள்.பல்வேறு காரணங்களால் வீதி முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இது  யாழ்  மாவட்டமாக இருந்தாலும் வீதி பராமரிப்பு கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்படுகிறது.அதாவது அம்பனிலிருந்து ஏனைய பகுதிகள் கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை நிர்வாக ஆளுகைக்குள் உட்படுகிறது.இது தொடர்பில் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொறுப்புக் கூற வேண்டும்.  பல தடவைகள் இது விடயமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதைத்தும் அவர்கள் சாட்டு போக்கு சொல்லி அதனை மழுங்கடித்து செல்வதையே காண முடிகிறது.இந்த வகையில் குறித்த வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவராக இருந்தாலும் வருக தந்த பார்வையிட முடியும்.  எனவே குறித்த  வீதி  கட்டாயம் செப்பனிடப்பட வேண்டும்.இந்த வீதியை வைத்து பலர் கொள்ளை அடித்திருக்கிறார்கள்  என்கின்ற சந்தேகங்களுக்கு எழுகிறது.ஒரு கிலோமீட்டர் வீதி செப்பநிடபடுவதற்கு எட்டு கோடியே 2 லட்சத்து 93  ஆயிரம் செலவு என்றால் 16 கிலோமீட்டர் வீதி திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு பணம் செலவாகியருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்ட பாருங்கள்.ஆனால் குறித்த  வீதிக்கு செலவழித்த நிதி அளவுக்கு இந்த வேலைகள் இடம்பெறவில்லை.தற்போது மாமுனையிலிருந்து கட்டைக்காடு வரையான  வீதி சொப்பனிடப்பட்டிருக்கிறது.அது மிகவும் தரமாக செப்பனிடப்பட்டிருக்கிறது.அதில் எந்தவித பமுதுகளோ ஏதும் இருக்கவில்லை.அந்த வீதியோடு ஒப்பிடுகிற போது பத்தித்துறை மருதங்கேணி  வீதி மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. மாமுனை கட்டைக்காடு வீதியோடு ஒப்பிடுகிற போது குறித்த மருதங்கேணி  பருத்தித்துறை வீதி 5 வீதம் கூட சரியானதாக இருக்கவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம்  எடுத்து வீதி அபிவிருத்தி  திணைக்களமாக இருக்கலாம்,  வீதி அபிவிருத்தி அதிகார சபையாக இருக்கலாம், அல்லது மாவட்ட செயலாளராக இருக்கலாம், அல்லது வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலாளராக இருக்கலாம்,  அல்லது பருத்தித்துறை பிரதேச சபையோ அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளோ இதில் அமைச்சர்கள், அரசியல்வாதிகளோ அனைவரும் கவனம் எடுத்து, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அல்லது காரணம் சொல்லப்பட வேண்டும்.  எனவே இது தொடர்பில் உரியவர்கள்  பொறுப்பு கூறாவிடில் மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக ரீதியான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement