• Nov 28 2024

யாழ்.தையிட்டியில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

Sharmi / Oct 14th 2024, 12:26 pm
image

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(13) காலை முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம் மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






யாழ்.தையிட்டியில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(13) காலை முன்னெடுக்கப்பட்டது.தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம் மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement