• Apr 28 2024

யாழ் மாவட்டத்திற்கு டெங்கு அபாய அறிவிப்பு - Dr.கேதீஸ்வரன் எச்சரிக்கை...!samugammedia

Tharun / Nov 28th 2023, 6:04 pm
image

Advertisement

யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நோயை தடுக்க மாவட்ட மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று யாழில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 

யாழ் மாவட்டத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2321 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 2 இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்தில் 3406 பேர் இனங்காணப்பட்டிருந்தனர். 10 இறப்புகளும் ஏற்பட்டிருந்தன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. 

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்கு பின்னரான 5 மாதங்களில் டெங்கு நோய் பரவல் அதிகமாக காணப்படும். நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நோயை தடுக்க மாவட்ட மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரதேச செயலாளர் தலைமையிலே பிரதேச மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிராமிய மட்டத்தில் கிராம சேவையாளர் மூலமாக டெங்கு தடுப்பு செயலணிக்குழு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இம்மாதம் விசேட நுளம்பு கட்டுப்பாடு தினங்கள் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்களிடம் நாங்கள் கேட்டு கொள்வது டெங்கு நோய்  நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை வீடு, பாடசாலை, வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் செய்ய வேண்டும். கழிவகற்றல் முறையினை உரியவாறு செய்ய வேண்டும். டெங்கு நோய்க்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலை வர வேண்டும். தகுந்த வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

யாழ் மாவட்டத்திற்கு டெங்கு அபாய அறிவிப்பு - Dr.கேதீஸ்வரன் எச்சரிக்கை.samugammedia யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நோயை தடுக்க மாவட்ட மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று யாழில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2321 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 2 இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்தில் 3406 பேர் இனங்காணப்பட்டிருந்தனர். 10 இறப்புகளும் ஏற்பட்டிருந்தன. கடந்த வருடத்தை விட இவ்வருடம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்கு பின்னரான 5 மாதங்களில் டெங்கு நோய் பரவல் அதிகமாக காணப்படும். நவம்பர் மாதம் டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்நோயை தடுக்க மாவட்ட மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரதேச செயலாளர் தலைமையிலே பிரதேச மட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக்குழு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிராமிய மட்டத்தில் கிராம சேவையாளர் மூலமாக டெங்கு தடுப்பு செயலணிக்குழு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் விசேட நுளம்பு கட்டுப்பாடு தினங்கள் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்களிடம் நாங்கள் கேட்டு கொள்வது டெங்கு நோய்  நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை வீடு, பாடசாலை, வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் செய்ய வேண்டும். கழிவகற்றல் முறையினை உரியவாறு செய்ய வேண்டும். டெங்கு நோய்க்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலை வர வேண்டும். தகுந்த வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement