• May 11 2024

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள்!

Tharun / Apr 28th 2024, 12:37 pm
image

Advertisement

டுபாயில் இன்று (27) நடைபெற்று வரும் 21 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதன் போது ஹொங் ஹொங் அணி முதலிடத்தையும் (39.67 வினாடிகள்) இந்தியா மூன்றாவது இடத்தையும் (40.01 வினாடிகள்) பிடித்தன.

மேலும், 20 வயதுக்குட்பட்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த போட்டி 46.20 வினாடிகளில் நிறைவடைந்தது.

மேலும், ஆண்களுக்கான 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த போட்டியானது 03 நிமிடம் 09.48 செக்கன்களில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் டுபாயில் இன்று (27) நடைபெற்று வரும் 21 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.இதன் போது ஹொங் ஹொங் அணி முதலிடத்தையும் (39.67 வினாடிகள்) இந்தியா மூன்றாவது இடத்தையும் (40.01 வினாடிகள்) பிடித்தன.மேலும், 20 வயதுக்குட்பட்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.இந்த போட்டி 46.20 வினாடிகளில் நிறைவடைந்தது.மேலும், ஆண்களுக்கான 4x400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.இந்த போட்டியானது 03 நிமிடம் 09.48 செக்கன்களில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement