• Sep 19 2024

நாட்டில் டெங்கு நோயார்கள் அதிகரிக்கும் அபாயம்! 17 பேர் உயிரிழப்பு

Chithra / Sep 17th 2024, 1:00 pm
image

Advertisement

 

நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளர்களும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மேலும் வடமாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் டெங்கு நோயார்கள் அதிகரிக்கும் அபாயம் 17 பேர் உயிரிழப்பு  நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும்.இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளர்களும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்மேலும் வடமாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement