• Feb 17 2025

புகையிரதத் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம்..!

Chithra / Jun 2nd 2024, 12:22 pm
image

 

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride  சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமது அன்றாட பணிகளுக்காக புகையிரத போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் தமது வாகனங்களை பாதுகாப்பான முறையில் புகையிரத நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு புகையிரத பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி Park & Ride சேவை வாகன தரிப்பிடத்தில் சிறிய கட்டணம் அறவிடப்படுவதுடன்,

தமது வாகனங்களை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான முறையில் நிறுத்தி விட்டு,

 புகையிரத பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புகையிரதத் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம்.  இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride  சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.தமது அன்றாட பணிகளுக்காக புகையிரத போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் தமது வாகனங்களை பாதுகாப்பான முறையில் புகையிரத நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு புகையிரத பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி Park & Ride சேவை வாகன தரிப்பிடத்தில் சிறிய கட்டணம் அறவிடப்படுவதுடன்,தமது வாகனங்களை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பான முறையில் நிறுத்தி விட்டு, புகையிரத பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement