• Nov 28 2024

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை- 25 ஆம் திகதி புயல்- பிரதீபராஜா அறிவிப்பு!

Tamil nila / Oct 19th 2024, 9:50 pm
image

வங்காள விரிகுடாவில் நாளை 20 ஆம் திகதி இரவு அல்லது நாளை மறுதினம் 21 ஆம் திகதி பகல் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக  யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இது எதிர்வரும் 22 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் திகதி  அன்று புயலாக மாறி இந்தியாவின் புவனேஸ்வர் க்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய நிலையில் இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. 

இதன் காரணமாக இன்று மாலை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

எதிர்வரும் 22 ஆம் திகதி   முதல் 26 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. 

அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளன. அதேவேளை நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வரும் நவம்பரில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எனத்தெரிவித்தார். 


வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை- 25 ஆம் திகதி புயல்- பிரதீபராஜா அறிவிப்பு வங்காள விரிகுடாவில் நாளை 20 ஆம் திகதி இரவு அல்லது நாளை மறுதினம் 21 ஆம் திகதி பகல் அந்தமான் தீவுகளுக்கு அண்மித்ததாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக  யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், இது எதிர்வரும் 22 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு திசையில் நகர்ந்து 25 ஆம் திகதி  அன்று புயலாக மாறி இந்தியாவின் புவனேஸ்வர் க்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. இதன் காரணமாக இன்று மாலை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி   முதல் 26 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. அதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதத்திலும் மூன்று தாழமுக்க நிகழ்வுகள் தோன்றும் வாய்ப்புள்ளன. அதேவேளை நவம்பர் மாதத்தின் 18 நாட்கள் மழை நாட்களாக அமையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் வரும் நவம்பரில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எனத்தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement